Categories
தேசிய செய்திகள்

” டெல்லி முன்னாள் முதல்வர் மரணம் ” கட்சியினர் அதிர்ச்சி …!!

டெல்லியில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்த , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில்  முதலமைச்சராக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித் ஆவார். 81 வயதான இவர் 2014_ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கேரள மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்தார்.

Image result for ஷீலா தீட்சித்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த இவர் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில கமிட்டியின் தலைவராக இருந்தார். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட இவர்தோல்வி அடைந்தார்.இன்று காலை தீடிரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷீலா தீட்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |