ஜெர்மனியை சேர்ந்த நபர் ஒருவருக்கு ஸ்பெயின் நீதிமன்றம் நாட்டிற்குள் நுழைவதற்கு 10 ஆண்டுகளுக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த யூடியூபர் (52 வயது) ஒருவர் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நடவடிக்கைகளை ரகசியமாக பதிவுசெய்து அதனை காணொளியாக அவரது யூடியூப் சேனலில் பதிவு செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 2019 ஸ்பெயின் நாட்டில் உள்ள மல்லோர்கா தீவிற்கு சென்ற இவர் அங்கு உள்ள வணிக வளாகம் ஒன்றில் வைத்து 14 வயது சிறுமியை ஆபாசமாக படம் பிடித்ததாக அங்குள்ள பாதுகாப்பு ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த ஜெர்மனியரை கைது செய்து இரண்டு நாட்கள் காவல் நிலையத்தில் வைத்து அதன்பின் உடனே அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த ஸ்பெயின் நீதிமன்றம் முதலில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்பின்னர் இந்த தண்டனையை மாற்றி 10 வருடம் ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய தடைவிதித்தும், மேலும் ரூ. 5,10,434 அபராதமும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனியிலிருந்து நேர்காணல் காணொளி காட்சி மூலம் இந்த விசாரணையை எதிர்கொண்ட அந்த நபர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்பதாக கூறியுள்ளார்.