Categories
மாநில செய்திகள்

விருப்பம் இல்லாதவர்களை…. கட்டாயப்படுத்த கூடாது…. அதிரடி அறிவிப்பு…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விருப்பம் இருந்தால் மட்டுமே தபால் வாக்கு அளிக்கலாம். அவர்களை தபால் ஒட்டு தான் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வாகனங்கள் தேவைப்பட்டால் ஏற்பாடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |