தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மேலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கவும் தேர்தல் ஆணையம் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்கும் உதவக்கூடாது என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது. தங்களுடைய வீடுகளில் அரசியல் கட்சிகளின் சின்னங்களை ஊழியர்கள் பொறிக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.