பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஹிட்டேஷா சந்திராணி. இவர் தான் உணவு ஆர்டர் செய்த நிறுவனத்திடமிருந்து உணவு டெலிவரி செய்ய தாமதம் ஆனதால் டெலிவரி செய்யும் நபரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதில் அவர் தனது மூக்கிலே குத்தி விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இவருடைய இந்த கோரிக்கையை ஏற்ற அந்த நிறுவனம் டெலிவரி பாயான காமராஜ் என்று அந்த நபரை வேலையிலிருந்து நீக்கியது. இதையடுத்து காமராஜ் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து தற்போது காமராஜ் கூறுகையில், “அந்தப்பெண் தாமதமாக வந்ததற்கு உணவுக்கு பணம் தரமுடியாது என்று சண்டை போட்டதாகவும், ஹிந்தியில் கெட்ட வார்த்தையில் திட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும் வாக்குவாதம் முற்றியதால் செருப்பை எடுத்து தன்னை அடித்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அவரே தன்னுடைய கையில் உள்ள மோதிரத்தால் மூக்கில் குத்தி காயப்படுத்தி கொண்டதாகவும்” கூறியுள்ளார்.