Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி): மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது போடி தொகுதி. மா, பலா, இலவு, நெல்லி அதுமட்டுமின்றி ஏலக்காய், காபி, மிளகு போன்ற பணப்பயிர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதமான தட்பவெப்ப நிலை கொண்ட போடியை குட்டி காஷ்மீர் என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி புகழாரம் சூட்டி இருந்தார்.

போடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 4 முறையும், அதிமுக 7 முறையும், திமுக 3முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். இந்த 10 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து மட்டுமின்றி கடந்த 4 ஆண்டுகளாக துணை முதலமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் சற்றே அதிகமாக இந்த தொகுதியில் உள்ளனர்.

போடி தொகுதியில் சாலை வசதி மேம்பாடு மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அகல ரயில்பாதை திட்டங்களும் மிக மெதுவாக நடைபெறுவதால் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக கொட்டக்குடி ஆறு குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

மா  விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாம்பழக்கூழ் தொழிற்சாலையை அமைக்க வேண்டுமென்றும், குளிர்பதன கிடங்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக உள்ள போடி தொகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாமல் இருப்பதாக குற்றம் சாட்டும் மக்கள் தேர்தல் நாளுக்காக காத்திருக்கின்றனர்.

Categories

Tech |