மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் 7 இந்திய பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது .
சர்வதேச பெண்கள் தின விழா நிகழ்ச்சி, அமெரிக்காவில் நியூயார்க் ,நியூஜெர்சி ,கனக்டிகட் மாகாண இந்தியர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் நியூயார்க்கின் இந்திய துணைத் தூதரான ரந்திர் ஜெய்ஸ்வால் பங்கேற்று பல துறைகளில் சேர்ந்த சாதனை படைத்த 7 பெண்களுக்கு நினைவுக் கேடயம் விருது, சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். அதில் பேஜெல் அமீன் என்கிற தூய்மை இந்திய திட்டத்தின் தூதர் ,ஹார்ட்போர்டு ஹெல்த்கேர் மருத்துவமனையின் மருத்துவரான உமாராணி மதுசூதனா, ஆகியோர் கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டப்பட்டனர்.
மேலும் செவிலியர் ராஷ்மி அகர்வால், பல் மருத்துவர் அபா ஜெய்ஸ்வால் ,சட்ட ஆலோசகரான சபீனா தில்லான் , நடிகையும் தயாரிப்பாளருமான ராஷன ஷா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.மேலும் குடும்ப பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவசமாக முக கவசம், , உணவு உள்ளிட்ட உதவிகளை செய்ததாக மாஸ்க் ஸ்குவாட் என்ற மகளிர் அமைப்பை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.