Categories
கரூர் மாவட்ட செய்திகள்

போதைக்கு அடிமையான கணவன்… பிள்ளைகளை விட்டு சென்ற மனைவி… காத்திருந்த அதிர்ச்சி…!!

மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள நூலகவுண்டனூர் பகுதியில் சரவணன்-சித்ரா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சரவணன் மது போதைக்கு அடிமையாகி அடிக்கடி சித்ராவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் சித்ரா தனது இரண்டு குழந்தைகளையும் மாமியாரிடம் விட்டு விட்டு தனது தாய் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து சரவணனின் மனைவியான சித்ரா போலீசிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |