தன்னுடைய பெற்றோர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை கவனிக்க வேண்டும் என்று பட்டதாரி இளைஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவம் முதல் படிப்பு வரை உறுதுணையாக இருப்பர், இதன்பின் வயதான பெற்றோர்களை பெற்ற பிள்ளைகள்தான் பாதுகாக்க வேண்டும். இதற்கு மாறாக பிரிட்டனில் ஒரு சம்பவம் அரங்கேறியது. சித்திகி இன்று 41 வயதுடைய பட்டதாரி இளைஞர் தன் பெற்றோர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் தன் பெற்றோர்கள் தான் என்னை பாதுகாக்கவும் ,பண வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என்று அதில் குறிப்பிட்டுள்ளார். சித்திகி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து ,சிலசட்ட நிறுவனங்களில் பணியாற்றினார். கடந்த 2011ஆம் ஆண்டு இவர் வேலை இல்லாமல் இருந்துள்ளார்.
இதனால் துபாயில் இருந்த இவரது பெற்றோர் ,லண்டன் நகரில் ஹைட் பார்க்கில் உள்ள தங்களுடைய சொந்த வீட்டில் வாடகை இல்லாமல் சித்திக் தங்க வைத்தனர். இதுமட்டுமல்லாது அவருக்கு வாரந்தோறும் 400 பவுண்டுகளை வழங்கி வந்தனர். ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சித்திகிக்கு வழங்கிவந்த பண உதவியையும், தராமல் இருந்தனர். இதனால் சித்திகி பெற்றோர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். சென்ற ஆண்டு இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இவரது வழக்குப்பதிவு தாளை கிழித்து தூக்கி எறிந்துள்ளார் . இந்நிலையில் இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பே சித்திக்கின் இவர் படித்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் மீதும் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.