ராஜ குடும்பத்திற்கு எதிராக குற்றம் சாட்டிய ஹரி மேகனின் பேட்டிக்கு பிறகு பிரிட்டன் இளவரசரும் ,ஹரியின் அண்ணனுமான வில்லியம் முதன் முறையாக மௌனம் கலைத்துள்ளார்.
மகாராணி இதுகுறித்து தான் பார்த்துக் கொள்வதாக கூறிவிட்ட நிலையில் இந்த பிரச்சினைகளை தள்ளிவைத்துவிட்டு இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் அவர்களின் பணியை மீண்டும் துவக்கி உள்ளார்கள். கிழக்கு லண்டனில் உள்ள பள்ளி ஒன்றிற்கு இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி கேட்டும் பள்ளி மாணவர்களின் மன நலம் தொடர்பான திட்டம் ஒன்றிற்கு ஆதரவு அளிக்க சென்றுள்ளனர்.
அப்போது அவர்களிடம் ஊடகவியலாளர்கள் ஹரி மேகனின் பேட்டியை பற்றி கேட்டதற்கு வில்லியம் ‘அரச குடும்பம் இனவெறியர்கள் அல்ல’ என்று பதிலளித்துள்ளார்.மேலும் இது பற்றி ஹரி மேகனிடம் பேசினீர்களா என்று கேட்டதற்கு இன்னும் பேசவில்லை என்றும் ஆனால் கண்டிப்பாக பேசுவேன் என்றும் வில்லியம் பதிலளித்துள்ளார்.