Categories
அரசியல் மாநில செய்திகள்

சித்தாந்த அடிப்படையில் அல்ல…. தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி – முதல்வர் விளக்கம்…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதையடுத்து பாஜக வேட்பாளர்களை இறுதி செய்ய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் தான் பயணித்த காலம் கடினமான காலம் என்று அறிவித்துள்ளார். மேலும் அதிமுகவை வைத்து தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்க நினைப்பதாக கூறுவது முற்றிலும் தவறு. தேர்தலுக்காக மட்டுமே பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளது. சித்தாந்த அடிப்படையில் அல்ல என விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |