டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சராக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில கமிட்டியின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் 2014_ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கேரள மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்தார். 81 வயதான இவர் இன்று காலை தீடிரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரின் மறைவையொட்டி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஷீலா தீட்சித் மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றநிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்வீட்_டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் . அதில் , கட்சி எல்லைகளை தாண்டி அனைவராலும் மதிக்கத்தக்க தலைவர் ஷீலா தீட்சித் என்று புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
The passing away of former Chief Minister of Delhi, Smt. Sheila Dixit is deeply saddening. She was a tall Congress leader known for her congenial nature.
Sheilaji was widely respected cutting across party lines. My thoughts are with her bereaved family & supporters. Om Shanti!
— Rajnath Singh (@rajnathsingh) July 20, 2019