அறுவை சிகிச்சை செய்யும் நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றிய புதிய கருத்து வெளியிட்ட Anaesthesia மருத்துவம் நூலில் குறிப்பிட்டுள்ளது. அதில் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு வாரங்களுக்கு பின், அறுவை சிகிச்சை செய்து கொள்வது பாதுகாப்பாக இருக்கும். இதற்கு குறைவாக ஆறு வாரங்களுக்கு கீழ் , அறுவை சிகிச்சை செய்வது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு உயிரிழக்கும் வாய்ப்பு 2 மடங்கிற்கு அதிகமாக காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் கால வரம்பை குறித்து வெளியான அறிக்கையில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் 116 உலக நாடுகளில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 231 பேர் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ததை கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் முதல் இரண்டு வாரங்களில், அறுவைசிகிச்சை செய்து கொண்ட கொரோனாநோயாளிகளின் இறப்பு விகிதம் 4.0 சதவீதமாக உள்ளது. இதேபோன்று 3 முதல் 4 வாரங்களில் செய்து கொண்டவர்கள் 4.7 சதவீதம் ஆகும்.
5 முதல் 6 வாரங்களில் செய்துகொண்டவர்கள் 3.6 சதவீதமாக இருந்தது. ஆனால் 7 முதல் 8 வாரங்களில் செய்து கொண்டவர்கள் இறப்பு விகிதமானது 1.5 சதவீதமாக குறைந்து காணப்படுகிறது. இந்த ஆய்வை அடிப்படையாகக் கொண்டு அனைத்து வயதினருக்கும் இது பொருந்தும். இதனை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, கொரோனா தொற்று உள்ளவர்கள் 7 முதல் 8 வாரங்களுக்கு பின் அறுவை சிகிச்சை செய்வது மிக நல்லது. எனவே நோயின் தன்மையை உணர்ந்து நிதானமாக அறுவை சிகிச்சை செய்து கொள்வது ,அவர்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்தனர்.