Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING: திடீர் திருப்பம்…. யாரும் எதிர்பார்க்காத தொகுதியில்…. போட்டியிடும் கமல்…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். அவர் ஆலந்தூர் தொகுதியை போட்டியிடுவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |