மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி கிராமத்தில் வெங்கட்ராமன்-விஜயா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய திருமண நாளன்று வெங்கட்ராமன் வெளியூருக்கு சென்று விட்டதால் மனமுடைந்த விஜயா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து விஜயாவின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.