Categories
உலக செய்திகள்

ஒவ்வொருவருக்கும் 1,00,000…. ஜோ பைடனின் அதிரடி முடிவு…. ஒப்புதல் அளித்த நாடாளுமன்றம்…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தாக்கல் செய்த கொரோனா நிவாரண நிதி மசோதாவுக்கு நாடாளுமன்ற சபை ஒப்புதல் அளித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலில் அதிக பாதிப்புக்குள்ளான நாடான அமெரிக்காவில் இதுவரை 5,20,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா பரவலின் போது கொண்டு வரப்பட்ட ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலையை இழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்ய அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் பல்லவேறு முயற்சிகளை எடுத்துவருகின்றர். அவ்வகையில் கொரோனா தாக்கத்தை சமாளிக்க 1.4 டிரில்லியன் டாலர் நிவாரண நிதி மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து ஜோ பைடன் தாக்கல் செய்த அந்த நிவாரண நிதி மசோதாவுக்கு  நாடாளுமன்றத்தின் செனட் சபையும் மற்றும் பிரதிநிதித்துவ சபையும் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு முடித்த பின்னர்தான் மீதமுள்ள தடுப்பூசிகளை உலக அளவில் பகிர்ந்து கொள்ளப் போவதாக அறிவித்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த நிதி மசோதாதான் அமெரிக்க மக்கள் பெரும்பாலானோருக்கு கொரோனா நிவாரண நிதியாக அனைவருக்கும் ரூ.1 லட்சம் நேரடியாக கிடைக்க ஏற்பாடு செய்து வருகின்றது.

Categories

Tech |