இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை கடந்து இங்கிலாந்து வீரர் சாதனையை எட்டியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. லக்னோவில் அமைந்துள்ள வாஜ்பாய் ஏகான கிரிக்கெட் மைதானத்தில் 3-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பேட்டிங் செய்தது இதில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் 50 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 27.5 வது ஓவரில் போஸ்க் வீசிய பந்தில் பவுண்டரி அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
What a champion cricketer! 👏👏
First Indian woman batter to score 10K international runs. 🔝 👍
Take a bow, @M_Raj03! 🙌🙌@Paytm #INDWvSAW #TeamIndia pic.twitter.com/6qWvYOY9gC
— BCCI Women (@BCCIWomen) March 12, 2021
இதற்கு முன் 10273 ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வார்ட்ஸின் சாதனையை தொடர்ந்து 10,000 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.