காதலி கர்ப்பம் ஆனதால் வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க முடிவு செய்து காதலியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் பலமு மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர், அதே பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞனைக் காதலித்து வந்துள்ளார். அந்த பெண் அந்த இளைஞனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததால் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு அந்த இளைஞனுடன் கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞன் தற்போது செய்ய கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்றும் கருவை கலைத்துவிடலாம் என்று முடிவு செய்தனர்.
இதையடுத்து ஒரு செவிலியர் இடம் சென்று கேட்டபோது அவர் பத்தாயிரம் பணம் கேட்டுள்ளார். பின்னர் அந்த இளைஞன் பத்தாயிரம் ரூபாய் பணத்தை ஏற்பாடு செய்யுமாறு அந்த காதலியிடம் கூறியுள்ளார். அந்த காதலியும் வீட்டில் உள்ள நகைகளை விற்று ஏற்பாடு செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவரால் அந்த நகை பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் காலம் கடந்து கரு வளர்ந்துகொண்டே போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் அந்த காதலியை கொலை செய்ய திட்டமிட்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்தபோது அவர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று அந்த பெண்ணை கொன்று அவரின் உடலை ஆற்றங்கரையில் புதைத்து விட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து காதலனை கைது செய்தனர்.