Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குழந்தையுடன் சென்ற தம்பதிகள்…. குறுக்கே வந்த நாய்…. நடந்த துயர சம்பவம்…!!

விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பானுமதி என்ற பெண்குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து இவர்களின் மோட்டார் சைக்கிள் அய்யனாரூத்து பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குறுக்கே சென்றதால் கருப்பசாமி திடீரென பிரேக் போட்டுள்ளார்.

இதனால் மாரியம்மாள் நிலைதடுமாறி குப்புற கவிழ்ந்தது படுகாயமடைந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தை பானுமதிக்கு காயம் ஏற்படாமல் தப்பித்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியம்மனின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |