Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா…. மூதாட்டிக்கு நடந்த சோகம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் செல்லும் சாலையில் ஒரு மூதாட்டி சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஓன்று மூதாட்டி மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ஒரகடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மூதாட்டியின் விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |