தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 116 ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக 180 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த மாவட்டத்தில் பதட்டமான இடங்களாக கண்டறியப்பட்ட 51 இடங்களில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும் 543 துப்பாக்கி உரிமையாளர்கள் துப்பாக்கியை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.
இதில் 489 பேர் துப்பாக்கியை ஒப்படைத்த நிலையில் 54 பேருக்கு விலக்கு அளித்து உள்ளனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 116 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆர்.பாண்டியராஜன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.