Categories
மாநில செய்திகள்

திமுக vs அதிமுக…. இத்தனை தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியா…? சூடுபிடிக்கும் சேர்தல்..!!

அதிமுகவும் திமுகவும் 129 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டி போட்டுக் கொள்கின்றனர். அது யார் யார் இந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பது குறித்தும் பார்ப்போம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றனர். இன்று திமுக சார்பில் மு.க ஸ்டாலின் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். இதில் 129 தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேராக போட்டி போடுகின்றது.

ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எதிராக திமுக தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். ஆவடியில் மா.பா பாண்டியராஜனுக்கு எதிராக திமுக நாசர், நன்னிலம் தொகுதியில் அமைச்சர் காமராஜருக்கு எதிராக ஜோதி ராமன், திருவெற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு எதிராக கே பி சங்கர், மதுரை மேற்கில் செல்லூர் ராஜூவுக்கு எதிராக சின்னம்மாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Categories

Tech |