Categories
உலக செய்திகள்

“இன்று இரவுக்குள் கொடுக்க வேண்டும்”… பாகிஸ்தானுக்கு கெடு வைத்த ஐக்கிய அரபு அமீரகம்..!!

கடனாக வாங்கிய ஒரு மில்லியன் டாலரை இன்று இரவுக்குள் திருப்பித் தரவேண்டும் என்று பாகிஸ்தானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கெடு வைத்துள்ளது.

பாகிஸ்தான் அரசு ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒரு பில்லியன் டாலரை கடனாக வாங்கியிருந்தது. இதை இன்று இரவுக்குள் திருப்பித் தரவேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் கெடு விதித்துள்ளது. இதனால் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த தொகை  பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு அதன் முதிர்வுத் தொகை மார்ச் 12ம் தேதி நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் பணத்தைத் திருப்பித் தருமாறு ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது. பட்டத்து இளவரசரை சந்தித்து கால அவகாசம் கேட்பதற்கான முயற்சியில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |