Categories
தேசிய செய்திகள்

“மாநில அரசின் அதிகாரிகளை மாற்றக் கூடாது”… உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

மாநில அரசின் அதிகாரிகளாக இருப்பவர்களை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஐந்து மாநிலங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மாநில அரசு அதிகாரிகளாக இருக்கக்கூடிய அவர்களை மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையர்கள் சுதந்திரமாக செயலாற்ற வேண்டும். சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டத்துறை கூடுதல் செயலாளருக்கு மாநில தேர்தல் ஆணையர் கூடுதல் பொறுப்பு வழங்கியது, கேலிக்கூத்தாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |