Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சற்றும் எதிர்பாராத தருணம்…. நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்…. விபத்தில் பறிபோன உயிர்கள்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையலராக அரசு ஆதிதிராவிடர் விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமு தனது மோட்டார் சைக்கிளில் மானாமதுரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு புறப்பட்டுள்ளார். இவரது மோட்டார் சைக்கிள் அரியநேந்திரன் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.

இந்த விபத்தில் ராமுவும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சிவகுரு மற்றும் பிரசன்னா ஆகியோரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த சிவகுருவும், ராமுவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரசன்னாவை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பரமக்குடி தாலுகா காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |