நாளை முதல் நான்கு நாட்கள் வங்கி இயங்காது என்பதால் இன்று வங்கிகளில் பணம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மார்ச் 13 அதாவது இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை மற்றும் ஞாயிறு பொது விடுமுறை. மேலும் வங்கிகள் தனியார் மயமாக்க படுவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். வங்கி ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில் வங்கிகள் இயங்காது.
இதன் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என்பதால் ஏடிஎம் களிலும் பணத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகலாம். இதனால் மக்கள் மற்றும் பணத்தேவை அதிகமாக உள்ளவர்கள் இன்று ஏடிஎம் இருக்கு சென்று பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.