வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொம்மிகுப்பம் கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வேலூர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சோதனையில் சீனிவாசன் என்பவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து 2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 21 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் சீனிவாசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.