Categories
உலக செய்திகள்

OMG… கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 21 பேர்… அடுத்தடுத்து மரணம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொண்ட 21 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுவரையில் சுமார் 13,07400 பேருக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை  597 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 21 பேர் அடுத்தடுத்த இறந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இவ்வாறு மரணமடைந்த 21 பேரும் நுரையீரல் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை சுவிஸ்மெடிக்  என்று மருத்துவக் கண்காணிப்பு குழுவானது தெரிவித்துள்ளது. எனவே கொரோனா  தடுப்பூசி செலுத்தியதால் தான், இவர்கள் இறந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா  பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான பணிக்கு வேகமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |