Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

3,000மக்கள் பேசுனாங்க…! தங்கம் சொன்ன ”அந்த விஷயம்”… ஆட்டம் காணும் ஓ.பி.எஸ் கோட்டை …!!

திமுக சார்பில் போடிநாயக்கனுர் சட்டமன்ற தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ் செல்வன், துணை முதல்வர் ஏற்கனவே போடி சட்டமன்ற தொகுதியில் பத்து வருடமாக எம்எல்ஏவாக இருந்துள்ளார். இதுவரைக்கும் தொகுதிக்கு எந்த நன்மையும் செய்ததாக தெரியவில்லை. போடி தொகுதி மக்கள் வேட்பாளராக என்னை அறிவித்து உடனே 2000, 3000 மக்கள் என்னிடம் செல்லில் பேசினார்கள்.

எல்லா மக்களின் ஆதரவு இருக்கின்றது தொகுதி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும், இப்ப இருந்தவர் எதுவுமே செய்யவில்லை என்றுதான் சொன்னார்கள். அந்த வகையில் அந்தந்த தொகுதி மக்களுக்காக அண்ணன் தளபதி தலைமையில் செயல்படுவேன் என்று சொல்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி மிகப் பெரிய சக்தி வாய்ந்த கூட்டணி. இந்த கூட்டணி தான் வெல்லும் என்பது மக்களுடைய எண்ணம். நடந்து கொண்டிருக்கின்ற ஆட்சி அதிமுக ஆட்சி, ஊழல் அரசு, மத்திய அரசுக்கு அடிபணிந்து போகிறார்.

இந்த ரெண்டும் அகற்ற வேண்டும் என்றால் திமுக கூட்டணி தான் வெல்லும் என்று சொல்லி திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும்  பேச்சுவார்த்தையில் உடன்பாட்டில் ஒத்த கருத்தோடு களத்தில் இருக்கிறார்கள், நிச்சயமாக 100% திமுக வெற்றி பெறும் என தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். தங்க தமிழ்ச்செல்வன் இவ்வளவு உற்சாகத்துடன் பேசியது அதிமுகவை ஆட்டம் காண வைத்துள்ளது.

Categories

Tech |