சாகித்ய அகாடமி விருது என்பது சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படும் விருது ஆகும். இந்த விருதானது ஒவ்வொரு வருடமும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு எழுத்தாளர்களுடைய கனவாகவும் இருக்கிறது. திரைப்படங்களில் ஆஸ்கர் விருது வாங்குவது போல எழுத்தாளர்களுக்கு இந்த விருது வாங்க வேண்டும் என்பதும் ஒரு பெரிய லட்சியம் ஆகும்..
இந்நிலையில் 20 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பிரபல தமிழ் எழுத்தாளரான இமயம் என்பவருக்கு “செல்லாத பணம்” என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது ஆகும். இதையடுத்து இமயத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.