சிவராத்திரி என்பது பெண்கள் சிவனை வழிபட்டு அந்த நாள் முழுவதும் பூஜையிலிருந்து விரதம் மேற்கொண்டு கண்விழித்து சிவனை வழிபடுவது ஆகும். இந்த சிவராத்திரி பூஜையானது ஒவ்வொரு ஊரிலும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித்தெருவில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இதில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பாட்டி ஒருவர் வெறும் கையினால் அப்பத்தை சுட்டு பக்தர்களுக்கு கொடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த பாட்டி சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொதிக்கும் நெய்யில் கையை விட்டு பக்தர்களின் நெற்றியில் பூசி விடுவது வழக்கம்.
கடந்த 50 வருடங்களாக பாட்டி இதை விரதமிருந்து பயபக்தியோடு செய்து வருகிறார். ஏழு கூடைகளில் அப்பத்தை சுட்டு ஏழு ஊர்களுக்கும் வழங்குவது வழக்கம். மகா சிவராத்திரி அன்று நடைபெறும் இந்த பூஜையில் பெண்கள் விரதமிருந்து அப்பம் செய்வதற்கு தேவையான பொருட்களை தயார் செய்து கொடுப்பார்களாம். இந்த அப்பத்தை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு எவ்வித நோயும் குணமடைந்து விடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.