Categories
உலக செய்திகள்

“ஆசை காட்டி மோசம் செய்த பெண்”… குடும்பத்தினரை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை… இறுதியில் வெளிவந்த மோசடி திட்டம்…!!

லண்டனில் குடும்ப உறுப்பினர்களிடம் ஆசை காட்டி பண மோசடி செய்த பெண்னிற்கு மே மாதம் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் உள்ள கிரீன்விச் நகரில் ஹீயின் லீ என்ற பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வங்கியில் காசாளராக வேலை செய்து வருகிறார். ஹீயின் லீ தனது குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் பணத்தை கொடுத்தால் நான் வங்கியில் போடுவேன். பிற்காலத்தில் அது அதிகமாகி உங்களுக்கு நன்மை கொடுக்கும் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதனால் குடும்ப உறுப்பினர்கள் ஹீயின் லீயை நம்பி £ 68, 499 வரை பணத்தை கொடுத்துள்ளனர்.

ஆனால் ஹீயின் லீ பணத்தை வங்கியில் போடாமல்  சொந்த செலவுக்காக பயன்படுத்தி ஆடம்பர வாழக்கையும் வாழ்ந்துள்ளார். பின்னர் குடும்பத்தினரிடம் வங்கியில் பணத்தை செலுத்தியதற்கான போலியான ஆவணத்தையும் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் விசாரணை செய்த போது அவர் காட்டிய அனைத்து ஆவணங்களும் போலியானது என்று தெரியவந்தது.

இதனால் குடும்பத்தினர் ஹீயின் லீ மீது காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் 2019ஆம் ஆண்டு  மே மாதம் 20ஆம் தேதி ஹீயின் லீயை  காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஒரு வருடமாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அவர் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் நடப்பு ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி ஹீயின் லீ-க்கு தண்டனை வழங்கப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |