குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளில் இலவச அரிசி, பருப்பு, சீனி, சமையல் எண்ணெய் போன்றவற்றின் மாதந்தோறும் வாங்கி வருகின்ற. அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வாங்கி வருகின்றனர். இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பயனளிக்கும் விதமாக ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக தற்போது மேரா ரேஷன் ஆப் ( என் ரேஷன் ஆப்) என்ற செல்போன் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் நோக்கமானது தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை இந்தியா முழுவதும் வழங்குவதே ஆகும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொருட்களை வாங்க உதவுகிறது.
இந்த மேரா செயலியின் சிறப்பம்சங்கள் என்னவென்றால், பக்கத்தில் உள்ள நியாய விலைக் கடையை தெரிந்துகொள்ளலாம், உணவு தானியங்களை எவ்வளவு பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றிய தகவல்கள், சமீபத்தில் வாங்கிய பொருட்கள் மற்றும் பரிவர்த்தனைகள், ஆதார் இணைப்பு நிலவரம், புலம்பெயர் தொழிலாளர்கள் புலம்பெயரும்போது ஆப்பில் பதிவு செய்துகொள்ளலாம்.