Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. அரசை வன்மையாக கண்டிக்கிறோம்… அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!

சிவகங்கை இளையான்குடியில் எம்.பி.சி. இட ஒதுக்கீட்டில் 10.5% வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்த அ.தி.மு.க. அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள வாள் மேல் நடந்த அம்மன் கோவில் திடல் பகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த இளையான்குடி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது எம்.பி.சி. இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு செய்த அ.தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் சாமுவேலிடம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் யோகநாதன் கூறியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தற்போது போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |