Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக பிரபல நடிகருடன் இணையும் நயன்தாரா… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகை நயன்தாரா முதல் முறையாக பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் நடிகை நயன்தாரா அண்ணாத்த, நிழல், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை நயன்தாரா விஜய் , ரஜினி ,அஜித் , சூர்யா போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார் . ஆனால் இவர் இதுவரை உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து நடித்ததில்லை  .

Nayanthara To Play Kamal Haasan Pair In Indian 2 ? Check Out !!! - Fans  Express

இந்நிலையில் முதல் முறையாக நடிகர் கமல்ஹாசனுடன் நயன்தாரா இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒரு நடிகை கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |