Categories
சினிமா தமிழ் சினிமா

அற்புத விளக்குடன் வைபவ்… பூதமாக முனிஷ்காந்த்… அசத்தலான ‘ஆலம்பனா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

நடிகர் வைபவ் நடிப்பில் தயாராகி வரும் ஆலம்பனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் வைபவ் ‘சரோஜா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த வைபவ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் லாக்கப் . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர்  நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டேரி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆலம்பனா’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .

இதில் வைபவ் கையில் அற்புத விளக்கை வைத்துக்கொண்டு போஸ் கொடுக்க பின்னால் பூதமாக முனிஸ்காந்த் நிற்கிறார். ஹாலிவுட்டில் வெளியான அலாவுதீன் பட சாயலில் அமைந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை பார்வதி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார் . கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார் .

Categories

Tech |