அமெரிக்காவில் தனது காரில் பயணித்த பெண்களிடம் மாஸ்க் அணிய சொன்னதற்காக கார் ஓட்டுனரிடம் அந்தப் பெண்கள் இன ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேபாளத்தை சேர்ந்த 32 வயதான சுபகார் கட்கா என்பவர் சான் பிரான்சிஸ்கோவில் உபேர் கார் ஓட்டுனராக பணி செய்து வருகிறார். கடந்த வாரம் தனது காரில் ஏறிய மூன்று பெண்களில் ஒருவரிடம் மாஸ்க் இல்லாததால் பெட்ரோல் நிலையத்தில மாஸ்க் வாங்குவதற்காக காரை நிறுத்தியுள்ளார்.ஆனால் அந்தப் பெண்களோ சுபாகரை மோசமான வார்த்தைகளால் திட்டி அவரிடம் மோசமாக நடந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சுபாஹருடைய காரிலிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
அதில் ஒரு பெண் சுபகாரின் அருகே சென்று இருமி பிறகு அவரிடமிருந்த மாஸ்க்கை பிடுங்கி எறிவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இன்னொரு பெண் பெப்பர் ஸ்பிரேயை காருக்குள் அடித்துள்ளார்.மேலும் இதுகுறித்து சுபாஹர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் சுபாஹரின் முகத்தின் அருகில் இருமிய 24 வயதான அர்னா கிமியாய் வேறொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் அதில்’ நான் விட்டால் அவரை அடித்து இருப்பேன் ‘என்றும் ‘உபேர் மற்றும் லிப்ட் ஆகிய நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்’.
ஆனால் தற்போது லிப்ட் மற்றும் உபேர் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை அர்னா பயன்படுத்துவதற்கு முற்றிலுமாக தடை விதித்துவிட்டனர். அத்துடன் காரில் பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்திய 24 வயதான மலேசிய கிங் என்ற பெண் ரசாயனம் ஒன்றை தாக்கும் ரீதியாக பயன்படுத்தியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.