Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்காக மாரத்தான் ஓட்டம்…. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு…!!

சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தனியார் அமைப்பு சார்பில் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை  மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார்.

Image result for chennai marathon

இந்த மாரத்தான் போட்டியின் மூலம் கிடைக்கும் தொகையில் உடல் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை,கால், உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும் இப்போட்டியில்  ரூபாய் 14 லட்சம் வரை தொகை ஈட்டியதாக நிறுவனம் தெரிவித்தது. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |