தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஜோலார்பேட்டையில் அமைச்சர் கே.சி வீரமணியை எதிர்த்து அவரது சகோதரி மகன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் போட்டியிடும் சாம்ராஜ், அமைச்சர் கே.சி வீரமணியின் சகோதரி மகன் ஆவார். இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவின் முக்கிய புள்ளிகளை தோற்கடிக்கவே டிடிவி தினகரன் வியூகம் வகுத்து இதுபோன்று வேட்பாளர்களை அறிவிப்பதாக கூறப்படுகிறது.