Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பருத்தி கொள்முதல்” பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியல்… நாகையில் பரபரப்பு..!!

நாகையில் பருத்திக் கொள்முதலின் போது திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்ட  விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மாயூரம் கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டாலுக்கு 5,800 ரூபாய் வரை வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின் திடீரென்று வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பருத்தியை கொள்முதல் செய்யாமல் அப்படியே விட்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Image result for விவசாயிகள் சாலை

மேலும் தங்களுக்கு உரிய தொகையை பெற்றுத் தரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளை சமாதானம் செய்யும் வகையில், உரிய பணத்தை நாளைக்குள் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தனர் அதிகாரிகளின் சமாதானத்திற்கு பின் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Categories

Tech |