100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவசமாக தர்பூசணி வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம், பேரணி, நடனம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு இலவசமாக தர்பூசணி வழங்கியுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் தன்ராஜ் போன்ற பலர் கலந்து கொண்டு பேருந்து நிலையம், உழவர் சந்தை மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை விநியோகம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை தாலுகா அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அப்போது விழிப்புணர்வு பலகையில் தேர்தல் நடத்தும் அதிகாரி துரைசாமி தலைமை தாங்க பொதுமக்கள் கையெழுத்து போட்டுள்ளனர்.