Categories
அரசியல்

வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டிய விவரங்கள் என்ன?

வேட்பாளர் ஒருவர் வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது , அதில் குறிப்பிட வேண்டிய அடிப்படை விவரங்கள் என்னென்ன ?

தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கக்கூடிய சூழல் வேட்புமனுவில் என்னென்ன விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் ? வேட்பாளரா நிற்கின்றவர் அதை பூர்த்தி செய்யும் போது என்னென்ன தகவல்களை அதில் குறிப்பிடவேண்டும் என்ற அடிப்படை தகவல்கள்:

வேட்புமனுவை பொறுத்தவரைக்கும் முதலில் தன்னுடைய அடையாளமா இருக்கக்கூடிய புகைப்படத்தை கொடுக்கணும். அந்த புகைப்படம் வந்து வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்டு இருக்கணும். அந்த வேட்பு மனுவில் ஒரு மூலையில் அது ஒட்ட படணும். அஞ்சல் வில்லை அளவில் அந்த புகைப்படம் இருக்கணும். 2இல் இருந்து 2 1/2 சென்டிமீட்டர் அளவில் புகைப்படம் இருக்கணும். மேலும் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படமாக  இருத்தல் வேண்டும்.

வேட்புமனு ஆறு பகுதிகளைக் கொண்டது.

பகுதி 1:

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார் என்றால் பகுதி ஒன்றை நிரப்ப வேண்டியிருக்கும். அதில், அடிப்படையான தகவல்கள் பெயர், வேட்பாளர் பெயர், தொகுதி பெயர், தந்தை தாய் பெயர், கணவர் பெயர்,  அஞ்சல் முகவரி போன்ற விஷயங்களை குறிப்பிட வேண்டி இருக்கும். கூடுதலாக வேட்பாளர் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர் ஒருவர் இந்த வேட்பாளரை  முன்மொழிந்து தன்னுடைய கையெழுத்து இடனும், அதுதான் அந்த பகுதி ஒன்றின் விதி

பகுதி இரண்டு:

இது பகுதி ஒன்றில் இருந்து மாறுபட்டு இருககூடிய நிலைமை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சாராத ஒரு வேட்பாளர், அவர் சுயேட்சையாக இருக்கலாம் அல்லது அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருக்கலாம். அவர் போட்டியிடுகின்றார் என்றால் வேட்பு மனுவில் பகுதி இரண்டை நிரப்பனும். இதிலும்  அடிப்படையான தகவல்களான பெயர், வேட்பாளர் பெயர், தொகுதி பெயர் , தந்தை , தாய் , கணவர் பெயர் , அஞ்சல் முகவரி போன்ற விஷயங்கள் குறிப்பிட னும். அதே மாதிரி எந்த தொகுதியில் போட்டியிடுகிறாறோ… அந்த தொகுதியயை சேர்ந்த வாக்காளர்கள் பத்து பேர் இவரை முன்மொழிந்து, வழிமொழிந்து கையெழுத்து போடணும் என்பது விதியா இருக்கு.

பகுதி மூன்று:

வேட்பாளர் பற்றிய சில அடிப்படை தகவல்கள் இதில் இருக்கின்றது. அதில், வேட்பாளர் இந்திய குடிமகனா ? அவருக்கு என்ன வயசு ? எந்த கட்சி சார்பில் போட்டியிடுறாரு ? அவர் பட்டியல் சாதியை சேர்ந்தவரா ? அல்லது பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரா ? என சில முக்கியமான கேள்விகளுக்கு வேட்பாளர் இந்த பகுதியில் பதில் சொல்லி, வேட்பாளர்  கையெழுத்து போடணும் என்பது விதி.

பகுதி மூன்று:

இந்த மூன்றாவது உட்பிரிவு என்ன சொல்றது ? என்றால்,  வேட்பாளரின் குற்ற பின்னணியை இதன் மூலமாக தெரிஞ்சிக்கலாம். வேட்பாளர் குற்றம் புரிந்தவரா ? அப்படி குற்றம் செய்திருந்தால் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக தண்டனை பெற்றவராக ? தண்டனை பெற்று இருந்தாலும், அது எந்த காலத்துல ? எப்போ ? எதற்காக ?

அந்த தண்டனை  கொடுக்கப்படுகிற விஷயத்தை குறிப்பிட வேண்டும். அதே போல வேட்பாளர்  தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கா என்ற விஷயத்தையும் குறிப்பிட வேண்டியதிருக்கிறது. இதற்கான பதில் எல்லாம் சரியா சொல்லிட்டு,  கீழ வேட்பாளர் தன்னுடைய கையெழுத்தை இட வேண்டும்.

பகுதி நான்கு:

இது  தேர்தல் நடத்தக்கூடிய அலுவலருக்கானது. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள், நேரம் போன்ற விஷயங்கள் குறிப்பிட்டு தேர்தல் நடத்த கூடிய அதிகாரி தன்னுடைய கையப்பத்தை இடுவார்.

பகுதி ஐந்து:

இதில் வேட்புமனு ஏற்கப்பட்டு இருக்கிறதா ? அல்லது நிராகரிக்கப்பட்டிருக்கிறதா ? என்பதை முடிவு எடுக்க கூடியவர் தேர்தல் நடத்த கூடிய அதிகாரி தான். அவர் ஏற்பு அல்லது நிராகரிப்பு இரண்டில் ஏதாவது ஒரு செயலை செய்து கீழ அவருடைய கையொப்பம் போடுவார்.

பகுதி ஆறு:

வேட்புமனுவை பெற்றுக்கொள்வதற்கான ரசீதும், பரிசீலனை அறிவிப்பும். ஏற்றுக்கொள்ளப்பட்டும் நிலையில் வேட்புமனு இருக்கின்றது அப்படியென்றால் அதை வாங்கிக்கொண்டு, அவர் டெப்பாசிட் பணம் கொடுத்ததற்காக ரசீதை அவரிடம் கொடுத்ததும், பரிசீலனைக்கான தகவலும் இதில் இடம் பெறுகிறது.

இதுதான் ஒரு வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் பூர்த்தி செய்யும் போது கொடுக்க வேண்டிய அடிப்படை தகவல்களாக இருக்கு .

Categories

Tech |