Categories
மாநில செய்திகள்

ஷாக் கொடுத்த கரண்ட்… 28,00,00,000ரூ மின்சார கட்டணம்…. அதிர்ச்சியில் ஏழை குடும்பம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழை  வீட்டில் மின்சார கட்டணமாக 128 கோடி ரூபாய் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் கபூர் மாவட்டத்தில் உள்ள சம்ரி பகுதியில் வசித்து வரும் வயதான தம்பதியர் இருவர், தங்களது வாழ்க்கையை கூலித்தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். அதிக அளவு வசதிகள் இல்லாத இவர்கள் அனைத்திலும் சிக்கனமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும் விதமாக,

Image result for மின்சார கட்டணம்

இம்மாதம் மின்சார அளவை பதிவு செய்ய மின்சார ஊழியர்கள் இவர்களது வீட்டிற்கு வந்து உள்ளனர். அப்போது அளவை பதிவு செய்து விட்டு அதற்கான கட்டணம் பில்லை அவர்களிடம் கொடுத்தனர். பில்லில் 128 கோடி ரூபாய் கட்டணமாக வந்தததை கண்டதும் இருவரும் அதிர்ச்சியில் திகைத்து நின்றனர்.

Image result for மின்சார கட்டணம்

இதனை தொடர்ந்து இவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை என்றும் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டது என்றும் மின்சார துறை வாரியத்திடம் வயதான ஏழை தம்பதியினர் புகார் அளித்தனர். இருப்பினும் மின்சார வாரியம் 28 கோடி ரூபாய் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், அவர்களது வீட்டிற்கு வழங்கப்பட்டு வந்த  மின்சாரத்தை துண்டித்தது. அதன்பின் புகாரின் பேரில் ஆய்வு மேற்கொண்ட மின்சார துறை பொறியாளர், இது வெறும் தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட பிரச்சனை தான் என்று மேற்கொண்ட ஆய்வின் பின் தெரிவித்தார்.

Categories

Tech |