தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு கட்சியும் அதிரடியான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அமமுக தேர்தல் அறிக்கை டிடி வி தினகரன் வெளியிட்டுள்ளார். இதில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும், விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும். டெல்டாவில் இயற்கை வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப்படும். இட ஒதுக்கீட்டில் எந்தச் சமூகமும் பாதிக்கப்படாத வகையில் தெளிவான நிலைப்பாடு எடுக்கபடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.