நெல்லையில் இன்று ஒரே நாளில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சீனாவில் பகுதியில் தோன்றிய கொரோனா தொற்று அனைத்து நாடுகளிலும் பரவி பெரும்சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இந்த தொற்றினை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதில் ஒரு பகுதியாக மக்களுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்தத் தொற்று பரவாமல் இருக்க பல நெறிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார்கள். அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளின் வெளிப்பாடாக வைரஸின் தாக்கம் குறைய தொடங்கியது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் . இந்த சந்தோஷம் நீண்ட நாள் நிலைக்காமல், கொரோனா தொற்று மீண்டும் படை எடுக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் இன்று நெல்லையில் ஐந்து பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் . இதனால் நெல்லையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,795 ஆக அதிகரித்துள்ளது .