கனடா நாட்டில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த 2 பெண்களிடம் நோயாளிகளிடம் தவறாக நடந்துகொண்ட மருத்துவரை கைது செய்தனர்.
ஜார்ஜ் போல் மிடியோஸிஸ் என்று 54 வயதுடைய மருத்துவர் ரொரன்ரோ பகுதியை சேர்ந்தவர். இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 16 மற்றும் 26 வயதுடைய இரு பெண்களை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்தனர் . இவர்கள் கொடுத்த புகாரின் படி போலீசார் அந்த மருத்துவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மருத்துவர் ஜார்ஜ் அடுத்த வியாழக்கிழமை அன்று காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்ட உள்ளார். இதுபற்றி போலீசார் கூறும்போது ,கைது செய்த மருத்துவரை விசாரணை செய்தனர் .நடத்தப்பட்ட விசாரணையில் ,இந்த மருத்துவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது .இவர் மூலமாக வேற பெண்கள் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தங்களிடம் வந்து புகார் தெரிவிக்கலாம் என்று போலீசார் கூறினர்.