Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் சிக்கிய 2 கூலிப்படை கொலையாளிகள் கைது ….!!

திருமங்கலத்தில் வாகன சோதனையின்போது 2 கொலை குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்

மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயதுக்குட்பட்ட இரண்டு பேர் கால்களில் ஆயுதங்களை கட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளிகள் தப்பி ஓட முயன்ற போது காவல் ஆய்வாளர் இளங்கோ அவர்களை மடக்கி பிடித்தார்.

Image result for கைது

தொடர்ந்து காவலர்கள் அவர்களிடமிருந்து சோதனை நடத்தியதில் பிச்சுவா கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில் இருவரும் கமுதியில் உள்ள மணிகண்டன் என்ற மணியை பழிக்குப்பழி வாங்க கூலிப்படையுடன் கொலை செய்ய வந்ததாக தெரிவித்தனர். இதனால் அந்த இருவரிடமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Categories

Tech |