திமுக மீதி நம்பிக்கை கொண்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் மனம் நெகிழ பதிவிட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் திராவிட முன்னேற்றக்கழகம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி வாகை சூடியது மக்கள் தங்கள் மீது வைத்திருந்த இந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் விதமாக அதிமுக அரசின் குறைகளை கண்டறியவும் திமுகவின் நிறைகளை தெரிந்து கொள்ளவும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஏராளமான மின்னஞ்சல்கள் ஆளும் அதிமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டி அனுப்பி வந்துள்ளது. இவை அனைத்தையும் பார்வையிட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதில், அதிமுக அரசின் அவலங்களையும், கோரிக்கைகளையும் பல்லாயிரக்கணக்கான #VoiceofTN மின்னஞ்சல்கள் வழியாக அனுப்பியிருந்தீர்கள். திமுக மீதான தமிழகத்தின் நம்பிக்கைக்கு நன்றி. ஆய்ந்து, தக்க விவரங்களுடன் சட்டமன்றத்தில் முன் வைத்திருக்கிறோம். தீர்வு கிடைக்கும் வரைக்கும் திமுக தொடர்ந்து போராடும்.என்று பதிவிட்டுள்ளார்.