Categories
உலக செய்திகள்

நோயாளியை தாக்கிய மருத்துவ ஊழியர்… வேடிக்கை பார்த்த போலீஸ்… வெளியான அதிர்ச்சி வீடியோ …!!!

ஜெர்மனியில் போலீசார் முன்னிலையில் மருத்துவமனையில் , மருத்துவ உதவியாளர்  நோயாளியை முகத்தில் அடித்து தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜெர்மன் நாட்டில் அமர் ஹெச் (வயது 32 ) என்ற அகதி ஜெர்மன் அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். இவர் குடிபோதையில் போலீசாரை தாக்கியதால் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் மீது பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்டது .எனினும் அவர் முகத்தில் ஏற்பட்டுள்ள காயத்தை பற்றி மருத்துவப் பரிசோதனை செய்ததில் ,முக கன்னத்து எலும்புகள் உடைந்து இருப்பது தெரிந்தது. இந்நிலையில் போலீசார் மறைத்த இந்த நிகழ்வானது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

அந்த வீடியோவில் கைது செய்யப்பட்ட அமரை ,ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து அவர் கை, கால்களை கட்டி வைக்கப்பட்டிருந்தார். அந்நேரத்தில் மருத்துவ உதவியாளர் ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் முன்னிலையில் ,அமரின் முகத்தை குத்தும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இதனால் அவரை தாக்கிய மருத்துவ உதவியாளர் நீக்கம் செய்து நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போலீசார் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |