Categories
ஆன்மிகம் இந்து

“கோயில் கோபுரத்தை விட… உயரமான கட்டிடங்களை கட்டக்கூடாது”… இதன் காரணம் தெரியுமா…? ஆச்சரியமூட்டும் தகவல்..!!

கோவிலின் அருகில் கோபுரத்தை விட உயரமான கட்டிடங்களை கட்ட கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அதற்கான காரணத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

முன்னொரு காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று சட்டம் இருந்தது. அதற்கு என்ன காரணம் தெரியுமா? கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை பலருக்கும் தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செம்பு, ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இந்த கலசங்களில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கொண்டது. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம் மக்கா சோளம் ஆகியவற்றை அதில் கொட்டுவார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். இதற்கான காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய  தானியங்களை நிரப்புவார்கள். அதை சம்பிரதாயமாகவே நாம் கடைப்பிடிக்கிறோம். ஆனால் 12 வருடங்களுக்கு தான் தானியங்களின் சக்தி இருக்குமாம். பிறகு அந்த சக்தி செயலிழந்துவிடும். அதனால்தான் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா செய்கிறார்.

இது எப்படி நம் முன்னோர்கள் அறிந்திருப்பார்கள் என்பது தான் ஆச்சிரியம்.  தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால் மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது. இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை.  கோபுரத்தில் உள்ள கலசங்கள் தான் நம் உலகில் முதல் இடிதாங்கி ஆகும். பலரை காப்பாற்றும் சக்தி அதில் உள்ளது. கோபுரம் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் அதன் விட்டம் 100 மீட்டர் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காப்பாற்றும் என்பது அறிவியல் உண்மை.

அந்த கலசங்களை சுற்றி சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள். ஒரு சில கோவில்களில் நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது. இது தோராயமான கணக்கு தான். உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை செய்து வருகிறது என்பதுதான் உண்மை.

Categories

Tech |